ENDLF

ENDLF


Untitled Document
வணக்கம்
 


  பழங்கால சிறப்பு வாய்ந்த ஈழம்?

   ______________________________________________________________________

   (கடந்த 11-04-2012 அன்று டெல்லியில் நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்) யினரால் 16-04-2012 அன்று இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் திருமதி. சுஸ்மாசுவராஜ் அவர்கள் உள்பட குழுவில் உள்ள அனைவரிடமும் தனித்தனியாக நேரிடையாக கையளிக்கப்பட்ட ஆங்கில அறிக்கையின் தமிழாக்கம் இதுவாகும்.)

   பழங்கால சிறப்பு வாய்ந்த ஈழம்?

   இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற அங்கத்தினர் குழுவுக்கு ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) சார்பில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. தமிழ் இனத்தின் வரலாற்றின் சிறு குறிப்புகள் அடங்கிய இந்த அறிக்கை தமிழரின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்வதற்காக எம்.பி. க்கள் குழுவிடம் கையளிக்கப்பட்டது.

   சிறிலங்கா (ஈழம்) என்னும் தீவு நாடு இந்தியப் பெருங்கடலில் அமிழ்ந்துவிட்ட பரந்த இலெமூரியா கண்டத்தின் எஞ்சி நிற்கும் நிலப்பரப்பே ஆகும்.

   ஏறத்தாழ 30,000 (முப்பதாயிரம்) ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் அங்கே புகழ் பெற்று சிறப்புடன் வாழ்ந்தனர் என்பது வரலாற்று உண்மை ஆகும். இந்தியாவும் ஈழமும் ஒரே நிலப்பரப்பில் இருந்த காலம் முதலே தமிழர்கள் அங்கே வாழ்ந்தார்கள் என்பதை நிரூபிக்க எத்தனையோ வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றன. சிறிலங்கா முழுவதுமே தமிழர்களுக்குச் சொந்தமானது ஆகும்: அவர்கள் மட்டுமே அந்தத் தீவு முழுவதிலும் வாழ்ந்தார்கள்.

   உயர்ந்த உள்ளம் கொண்ட பண்பாளர், பேரரசர் அசோகர், வட இந்தியாவை கி.மு. நான்காம் நூற்றாண்டு அளவில் ஆட்சி செய்தவர் ஆவார். அவர், புத்தர் நெறியைப் (BUDDHISM) பரப்புவதற்காகத் தம்முடைய குடும்ப வழித் தோன்றல்களை ஈழ நாட்டுக்கு (சிறிலங்காவுக்கு) அனுப்பினார் எனக் கூறப்படுகிறது. அந்தக் காலத்தில் ஈழத்தை தமிழ் மன்னரே ஆண்டு வந்தார். அவர்தாம், புத்தர் நெறியைப் பரப்ப வந்தவர்களுக்கு (பிரச்சாரகர்களுக்கு) வரவேற்பு வழங்கியுள்ளார். இவ்வளவுக்கும் தாம் ஒரு இந்து மதத்தின் சிவன் பக்தராக இருந்தபோதிலும் கூட, தமது ஆட்சி மண்டலத்தில் புத்தர் நெறி நுழைவதற்கு, மிகுந்த பெருந்தன்மையோடு அந்தத் தமிழ் மன்னன் அனுமதி அளித்துள்ளார்.

   உண்மையாகவே, யாழ்பபாணம் அருகில் உள்ள நயினா தீவு என்னும் தீவில்தான் முதல் முதலில் புத்த துறவிகள் காலூன்றினர். அங்கிருந்து அனுராதபுரம் வரை சென்று பிரசாரங்கள் செய்தனர். அவ்வாறு அவர்களுடைய கணக்கற்ற முயற்சிகளும், கவர்ச்சி மிக்க அருள் உரைகளும் நடைபெற்ற போதிலும் கூட இந்து மதத்தைக் கடைபிடித்து வந்த தமிழர்கள் புத்தர் நெறியைத் தழுவுவதற்கு அவ்வளவு எளிதில் விரும்பவில்லை.

   ஆனால், சிங்களவர் இடையே புத்தர் நெறியை ஊடுருவச் செய்வது மிகவும் எளிது என்பதை புத்த துறவிகள் கண்டுகொண்டனர். ஏனெனில் முறையான வடிவில் மொழியோ, மதமோ, எழுத்துப் படைப்போ இல்லாதவர்களாகவும், அநாகரீகமானவர்களாகவும் சிங்களவர்கள் இருந்தமைதான் புத்த துறவிகளுக்கு சாதகமாக அமைந்தது. புத்தத் துறவிகளின் உதவிகள் மூலமாக மட்டுமே ஒரு வாழ்க்கை முறையைச் சிங்களவர் அடைந்தனர். கி.பி. 10ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் தங்களுக்குச் சொந்தமான எழுத்து வடிவம் என்பதையே அவர்கள் உருவாக்கிக் கொண்டனர்.

   சிங்களவர்களே, தங்களின் வரலாற்று நூலில், கி.மு. 500-ஆம் ஆண்டில்தான் தங்களுடைய முன்னோர்கள் வங்க நாட்டில் இருந்து (பங்களாதேஸ்) வந்து இலங்கையில் குடியேறினார்கள் என்று குறிப்பிட்டு இருக்கின்றார்கள். இதுவே, அவர்கள் முழுக்க முழுக்க அந்நிய நாட்டினர் என்பதைத தெளிவாகவே தெரிவிக்கிறது. “மகாவம்சம்” என்னும் தங்களுடைய வரலாற்று நூலில், அவர்கள் பெருமிதத்தோடு கூறியுள்ள செய்தியும் இதுதான். “துட்ட கைமுனு என்னும் ஒரு சிங்கள மனிதன், கி.பி. 161-ஆம் ஆண்டில் பொலனறுவ என்னும் இடத்தில் எல்லாழன் என்கிற தமிழ் மன்னனுடன் சண்டையிட்டு அவனை வென்றான். சிறிலங்காவின் வடக்கு மத்திய மகாணத்தில் உள்ள அனுராதாபுரம் நகரை அவன் கைப்பற்றினான்.” – என்பதே அந்தச் செய்தி. ஆயினும்கூட, வலிமை மிகுந்த தமிழர்கள், சிங்களவர்களைத் தோற்கடித்து வென்று, மத்திய மாகாணம், அனுராதாபுரத்தையும் மீண்டும் கைப்பற்றியதுடன் இலங்கைத் தீவு முழுவதையுமே ஆட்சி செய்தனர்.

   சிங்களவரின் வரலாற்றை நூலாக வடித்துள்ளதில் மிக உயர்ந்ததாக மதிக்கப்படுகின்ற “மகாவம்சம்” என்பது - இந்தியாவில் இருந்து வந்த பாலி மொழி பேசும் புத்தத் துறவிகளால் எழுதப்பட்ட ஒரு கற்பனையான கருப்பொருள் கொண்ட நூலே ஆகும்.

   தமிழர்களின் வரலாறோ, பண்டைக் காலம் முதற்கொண்டு பின்னாளில் சிங்களவர், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், இறுதியாகப் பிரித்தானியர் ஆட்சிக் காலங்களிலும் நிலைபெற்று நின்றதாகும். அவ்வாறு அதன் விவரங்கள் அனைத்தும் திரட்டப்பட்டுச் சேமித்து வைக்கப்பெற்று இருந்த மிகப்பெரிய யாழ்ப்பாணம் நூலகம், இலங்கை இராணுவத்தால் 1981ஆம் ஆண்டு எரியூட்டப்பட்டுவிட்டது! ஐக்கிய தேசியக் கட்சியின் (யு.என்.பி.) ஆட்சியை நடத்திய ஜெயவர்த்தனா அரசின் உயர்மட்ட அமைச்சர்களான காமினி திசநாயகே மற்றும் சிறில் மாத்தியூ ஆகியோரின் முன்நிலையிலேயே அந்த நூலக எரிப்புச் சம்பவம் நடந்தது.

   நினைவுக்கு எட்டாத பழங்காலம் முதல் கி.பி. 16-ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் சிறிலங்காவுக்கு வந்த காலம் வரையிலும்கூட, தமிழரும் சிங்களவரும் ஒருவரையொருவர் போட்டியிட்டு சண்டையிட்டே வந்துள்ளனர். இலங்கைத் தீவை மாறி மாறியே ஆண்டிருக்கின்றனர். இதிலே பெருமிதத்தோடு குறிப்பிடக்கூடிய ஒரு செய்தி தமிழர்கள் எந்தக் காலத்திலுமே, யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு முதலான நகரங்களை விட்டுப் பிரிந்ததே இல்லை.

   சிங்களவர்கள் இலங்கைத் தீவில் நுழைவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே, ஈழத்தின் நாற்புறமும் ஐந்து சிவன் கோவில்களைக் கட்டி, அவற்றில் வழிபாடுகளை நடத்தி வந்தனர் தமிழ் மக்கள். அவை வருமாறு:

   (01) நகுலேசுவரம் சிவன் கோவில் - வடக்கு மாகாணம் (யாழ்ப்பாணம்)

   (02) கோனேசுவரம் சிவன் கோவில் - கிழக்கு மாகாணம் (திருகோணமலை)

   (03) முன்னீசுவரம் சிவன் கோவில் - மேற்கு மாகாணம் (சிலாபம்- சிங்களத்தில் சிலா)

   (04) திருக்கேதீசுவரம் சிவன் கோவில் - வடகிழக்கு மகாகாணம் (மன்னார்)

   (05) தொண்டீசுவரம் சிவன் கோவில் - தெற்கு மாகாணம் - (தேவேந்திர முனை – சிங்களத்தில தெவனருவா) – காண்க இணைப்பு படம் -1

   இவ்வாறாக, சிங்களவரின் ஊடுருவலுக்கு முன்பே, கடந்த தொன்மைக் காலத்தில் இலங்கையில் தங்களின் வாழ்க்கை நிலையை உறுதிப்படுத்தும் வகையிலேயே, அந்நாட்டில் ஆங்காங்கே என்றுமே நிலைத்து நிற்கும் நினைவுச் சின்னங்களைத் தமிழர்கள் எழுப்பியுள்ளனர். குறிப்பாக, இத் தீவின் தெற்குப் பகுதியில் கதிர்காமம் என்னும் இடத்தில், மலை உச்சியில் முருகன் கோவிலை அமைத்ததைக் குறிப்பிடலாம்.

   போர்த்துக்கீசியரால் ஈழத் தமிழர் மீது நடத்தப்பட்ட முதல் இனப்படுகொலை

   கி.பி. 16ஆம் நூற்றாண்டில், போர்த்துக்கீசியர் இலங்கைக்கு வந்தனர். அங்கே யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை முதலான தமிழ்ப் பகுதிகளைக் கைப்பற்றுவது பெரும் அளவுக்குக் கடினமானது என்பதை அவர்கள் கண்டுகொண்டனர். நீண்ட காலப் போராட்டத்துக்குப் பிறகே, கொழும்பு மற்றும் மன்னார் நிலப்பரப்புகளை அவர்களால் பிடிக்க முடிந்தது. அவற்றைத் தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வர முடிந்தது. அந்நிலையில், மன்னார் பகுதியில் வாழ்ந்த தமிழர்களைக் கிறித்துவத்துக்குப் போர்த்துக்கீசியர் மதமாற்றம் செய்தனர். யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னருக்கு அந்த மதமாற்றம் ஆத்திரத்தை மூட்டியதால் அவர் மன்னார் மீது படையெடுத்துச் சென்றார். போர்த்துக்கீசியர்களைத் தோற்கடித்து அங்கிருந்து அவர்களைத் துரத்தியடித்தார். மதம் மாறிய 600 கிறித்தவர்கள் மீது வெறுப்பு கொண்டு, இரக்கமே இல்லாமல் அவர்களின் தலைகளை அவர் துண்டித்தெறிந்தார்.

   இந்தப் படுகொலை போர்த்துக்கீசியருக்கு கொடிய சினத்தையே கொடுத்தது. ஆகவே, போர்த்துகல், கோவா, கொழும்பு ஆகிய இடங்களில் இருந்தெல்லாம் தங்கள் படைகளைத் திரட்டி வந்து, தமிழர்களின் தலைநகரான யாழ்ப்பாணம் மீது போர்த்துக்கீசியர் படையெடுத்தனர். கடுமையாகப் போர் புரிந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். கணக்கில் அடங்காத தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். வரலாற்று நினைவுச் சின்னங்கள் பலவும் அழிக்கப்பட்டன. பழங்காலத் (பூர்விகத்) தமிழர்களால் இலங்கையின் நாற்புறமும் கட்டி எழுப்பப்பெற்ற புகழ் மிகுந்த ஐந்து சிவன் கோவில்களும் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டன. இரத்தவெறி பிடித்த போர்த்துக்கீசியர்களோ- யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மன்னரின் அரண்மனை உள்ளிட்ட தமிழரின் நினைவுச் சின்னங்களில் ஒன்றைக்கூட விட்டுவைக்காமல் அழித்துவிட்டனர். இந்தப் பேரழிவு, கி.பி. 1560ஆம் ஆண்டில்தான் போர்த்துக்கீசியரால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது.

   அதே நேரத்தில் சிங்களவர்களுக்கோ, அவர்களது புத்த கோவில்களுக்கோ எந்த ஓர் அழிவினையும் போர்த்துக்கீசியர் என்றைக்குமே ஏற்படுத்தவில்லை. தமிழர்கள் மட்டுமே, இரக்கம் அற்ற போர்த்துக்கீசியரின் மிகக் கொடிய கோபத் தீக்கு இரையாகி எரிந்தனர். அத்தகைய தீமையும் தீராத் துயரும் வாட்டிய அந்தநேரத்தில், சிங்களவர்களோ, தமிழர்களைச் சித்திரவதை செய்வதில் போர்த்துக்கீசியருடன் கைகோர்த்துக் கொண்டனர்! போர்த்துக்கீசியரின் தமிழர் எதிர்ப்பு மனப்போக்கு, சிங்களவருக்கு மிகுந்த அனுகூலமானதாக அமைந்து விட்டது. தமிழர்கள் உதவுவார் அற்ற அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களது துயரச் சூழ்நிலையைச் சிங்கள அரசன், தனக்கு இன்ப ஆதாயம் அளிப்பதாகவே மாற்றிவிட்டான். தன்னுடைய சிங்கள குடிமக்களைத் தமிழ் மாகாணங்களுள் ஊடுருவுமாறு கட்டாயப்படுத்தினான்.

   இவ்வாறாக இலங்கையின் வட மத்திய மாகாணமும், மேற்கு மாகாணமும் சிங்களவரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. போர்த்துக்கீசியரைப் பின்தொடர்ந்து, ஹொலண்ட் நாட்டில் இருந்து டச்சுக்காரர்களும், பிரித்தானியாவிலிருந்து ஆங்கிலேயர்களும் ஆதிக்கம் செலுத்த வந்தனர். இந்த மூன்று ஐரோப்பிய கண்டத்து நாட்டினருமே இலங்கையில் ஆட்சி புரிந்தனர். அத்ததைய நாள்களிலும்கூட, தமிழர் மாகாணங்களும், சிங்களவர் மாகாணங்களும், இரண்டு வேறுப்பட்ட இனங்களைச் சேர்ந்த தனித் தனியான நிருவாக அமைப்புகளின் கீழ்தான் இருந்தன.

   ஈழத் தமிழர்களைப் புறக்கணித்த பிரித்தானியர்:

   பிரித்தானியா 1833-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ம் நாள் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. அதன் மூலம், தமிழ் மாநிலங்களும் சிங்கள மாநிலங்களும் ஒரே ஆட்சி நிருவாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. தொடக்க நடவடிக்கையாக, இந்தியாவின் ஒரு மாகாணப் பகுதியாகத்தான் இலங்கையை பிரித்தானியர் ஆண்டனர். பிற்காலத்தில், ஒரு நாடாகவே இலங்கையை ஆக்கி ஒரு தனியான ஆட்சி நிருவாகத்தின் கீழ் அவர்கள் கொண்டு வந்தனர். “கொழும்பு” என்னும் பெயருடைய நகரம் சிறிலங்காவின் தலைநகரமாக ஆக்கப்பட்டது. ஆகையால், கொழும்பு நகரின் உள்ளேயும் அதன் சுற்றுவட்டங்களிலும் இருந்த சிங்களவர்கள், ஆங்கிலேய ஆட்சி நிருவாகிகளிடம் நெருங்கிப் பழகக் கூடியவர்களாக ஆனார்கள். இந்தியப் பெருங்கடல் வழியாகச் செல்லும் கப்பல்கள் சிறிலங்காவின் தென்மேற்கு மாகாணத்தை ஒட்டியே கடந்து சென்றன. எரிபொருள், கரி, உணவுப் பொருள்கள் உள்ளிட்ட கப்பல் சரக்குகளை அவை ஏற்றிக்கொண்டு போயின. அந்தக் கடல் வணிக நோக்கத்துக்கு மிகவும் வசதியுள்ளதாகக் கொழும்பு அமைந்து இருந்தது. எனவே, அந்த மூன்று ஐரோப்பா நாடுகளின் ஆட்சியாளர்களுக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தலைநகரம் ஆகக் கொழும்பு உருவெடுத்துவிட்டது.

   ஆண்டுகள் கடந்தன. இரண்டாம் உலகப் போரின் போது (1939 – 45) பிரித்தானியா சந்தித்த பயங்கரப் பேரழிவுகளின் காரணமாக, தங்களின் சொந்த நாட்டுக்குத் திரும்பவேண்டி நேரிட்டது. சிறிலங்காவை விட்டும் மற்றக் குடியேற்ற நாடுகளை விட்டும் பிரித்தானியா வெளியேறியது. அதனால் அவர்கள் 1948ஆம் ஆண்டு பிப்பிரவரி மாதத்தில் இலங்கைக்கு விடுதலை அளித்தனர். அப்போது பிரித்தானியர் தமிழர்களைப் புறக்கணித்து விட்டனர். சிங்களவரிடம் மட்டுமே அரசியல் அதிகாரப் பொறுப்பை ஒப்படைத்தனர். தமிழர்களைத் தங்களுடைய நிரந்தர எதிரிகளாக எண்ணி வந்த சிங்களவருக்கு அந்த ஆட்சி மாற்றம் ஓர் ஆசிர்வாதமாகவே (அருள் வாழ்த்தாகவே) அமைந்துவிட்டது. கடந்த 2000 (இரண்டாயிரம்) ஆண்டுகளில் சிங்களவர்களால் எதனை சாதனையாக (முழு ஆட்சியையும்) அடையமுடிய வில்லையோ, அது தானாகவே அவர்கள் கையில் எளிதாகத் திணிக்கப்பட்டுவிட்டது. நாட்டின் விடுதலைக்குப் பிறகு, தமிழர்களைத் தங்களின் கைமுட்டுக்குக் கீழே அழுத்தி வைக்கும் அளவுக்கு அனைத்து அதிகார உரிiமையும் உள்ளவர்களாக அவர்கள் தங்களை ஆகிவிட்டார்கள். முதல் நடவடிக்கையாகச் சிங்களவர்கள் தங்களின் இராணுவத்தைப் பலப்படுத்தினார்கள். அந்தப் படையின் அணிகளுக்குச் சிங்கள அரசர்களின் பெயர்களையே சூட்டினார்கள். சிங்க படையணி, கைமுனு (காமினி) படையணி, கஜபாகு படையணி, விஜயபாகு படையணி- இப்படியெல்லாம் பெயர் வைத்தார்கள். விடுதலை என்பது தங்களுக்கு மட்டுமே தரப்பட்டதாகவும், பழங்காலத்(பூர்விகத்) தமிழர்களுக்கு அளிக்கப்படவில்லை என்பதாகவும் சிங்களவர்கள் எண்ணம் கொண்டவர்களாக ஆகிவிட்டனர்.

   தமிழர்களை அடக்கிக் கீழ்மைப்படுத்தி மதிப்பு அற்றவர்களாக ஆக்க வேண்டும் என்பது அவர்களது எண்ணம் ஆகும். நினைவுக்கு எட்டாத காலம் முதலே அதே தீவில் வாழ்ந்து வருகின்ற தமிழர்களை அழுத்தி நசுக்குவதற்காக மட்டுமே சிங்களவர்களின் அரசு திகழ்ந்தது. கி.மு. 500-ஆம் ஆண்டில் சிறிலங்காவில் நுழைந்தது முதற்கொண்டே இரக்கம் அற்றவர்களாகவும், தன்னலம் கொண்டவர்களாகவுமே சிங்களவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

   ஈழத் தமிழர் மீதான சிறிலங்கா அரசின் அடக்குமுறை:

   இலங்கை விடுதலை அடைந்த உடனேயே, சிங்கத்தின் சின்னம் பொறிக்கப்பட்ட தேசியக் கொடியைத் தங்களுக்குச் சொந்தமானதாகச் சிங்கள ஆட்சியாளர்கள் வடிவமைத்துக் கொண்டனர். சிங்கத்திடம் இருந்து பிறந்தவர்களே சிங்களவர்கள் என்னும் கருத்தைப் புத்தத் துறவிகள் பரப்பி வந்தனர். அந்தக் கற்பனையான கருத்துதான் வரலாற்று உண்மையாக தேசியக் கொடி மூலம் நிலைநாட்டப்பட்டது. புத்தத் துறவிகளின் “மகாவம்சம்” என்னும் நூலில் குறிப்பிடப்பட்டு உள்ள ஒரு கற்பனையான கருப்பொருள் மூலம் சிங்களவரின் உள்ளங்களில் வீர உணர்ச்சியை விதைத்துள்ளனர் புத்தத் துறவிகள். சிங்களவர்கள் சிங்கத்துக்குப் பிறந்தவர்களே என்று அவர்கள் நம்பும்படி ஆக்கப்பட்டு உள்ளனர். ஒரு மனிதப் பிறவியிலிருந்து தான் ஒவ்வொரு மனிதப் பிறவியும் பிறக்கின்றது என வலியுறுத்திச் சொல்கின்ற விஞ்ஞான உண்மைகளுக்கு முற்றிலும் முரண்பட்டதே புத்த துறவிகளின் இந்தக் கருத்து. கணிணி அறிவியல் வளர்ந்துள்ள இன்றைய கால கட்டத்தில் (சகாப்தம்) கூட, பகுத்தறிவு இல்லாததும் கற்பனையுமான ஒரு கருத்தின் மீது சிங்களவர்கள் தங்களது மத நம்பிக்கையை அழுத்தமாகப் பதித்து வந்துள்னர். இந்தப் போக்கு பெரிதும் வருந்தத் தக்கதே ஆகும்.

   உலகம் முழுவதுமே, மனிதப் பரிணாம வளர்ச்சிப் பற்றிய டார்வின் அவர்களின் விஞ்ஞானத் தத்துவத்தை ஏற்றுக்கொண்டு, குரங்கின் முன்னேற்றமான பிறவி நிலையே மனிதன் என நம்புகின்ற பொழுது- தாங்கள் மட்டும் சிங்கத்தில் இருந்து வந்ததாகச் சிங்களவர்கள் இன்றைக்கும் நம்புகிறார்கள். இது உண்மையிலேயே சிரிக்கத் தக்க பொய்க் கருத்து ஆகும். ஒருவேளை இந்தக் கேலிக்கு உரிய நம்பிக்கையினால்தான், மிருகத்தனமான சிங்களவர்கள், பகுத்தறிவு அற்ற ஒரு விலங்கைப் போல ஏன் மக்களை ஆளுகின்றார்கள் என்றும் - அதனால் தான் தங்களுடைய தேசியக் கொடியில் சிங்கத்தைச் சின்னமாகப் பொறித்துக் கொண்டனர்.

   “ஈழம்” என்பது தான் இன்றைய “சிறிலங்கா” என்னும் நாட்டின் மூலப்பெயர் ஆகும். அவ்வாறு உள்ள போது, சிங்களவர்களோ ஈழம் என்பதைச் சிறிலங்கா என்றே அழைக்கின்றனர். தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட நூல்களிலும், இதிகாசங்களிலும் “ஈழம்” என்கிற சொல் குறிப்பிடப்பட்டு வந்துள்ளது. ஈழம் என்பது ஒரு தூய்மையான தமிழ் மொழிச் சொல்: அதே வேளையில் “லங்கா” என்பது வட இந்தியாவின் பாலி மொழிச் சொல் ஆகும். “லங்கா” என்பதற்குப் பொருள் “தீவு” என்பது ஆகும். மிகத் தொலைவில் உள்ள நாடுகளில் இருந்து வந்துள்ள புத்த துறவிகள் ஈழம் என்பதை லங்கா என்று அழைத்தனர். சிங்கள மொழியில் ஈழம் என்பதற்கு இணையான சொல் எதுவுமே இல்லை. ஆகவேதான், பாலி மொழிச் சொல்லான “லங்கா” என்பதைத் தங்களது சொந்தச் சொல்லாகவே ஏற்றுக்கொண்டு விட்டனர் சிங்களவர்கள். பின்னர் இதே “லங்காவை” தமிழர்களும் “இ” என்ற எழுத்தை முன் இணைத்து “இலங்கை” என்று குறிப்பிட்டுள்ளனர். வால்மிகியின் இராமாயண காலத்தில் ஈழத்தை “லங்கா” என்றுதான் குறிப்பிட்டுள்ளார் வால்மிகி.

   திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்க, 1972-ஆம் ஆண்டில், சிறிலங்கா நாட்டின் தலைமை அமை;சசராக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார். அவர் அரசமைப்புச் சட்டதத்தில் திருத்தம் கொண்டு வந்து சிறிலங்காவை ஒரு குடியரசு நாடாகப் பிரகடனம் செய்தார். “லங்கா” என்னும் சொல்லுக்கு முன்சேர்க்கையாக “ஸ்ரீ” என்பதை அவர் இணைத்தார். அதையே “ஸ்ரீpலங்கா – ஒரு குடியரசு” என அழைத்தார். இவ்வாறுதான் “சிறிலங்கா” என்பது பிறந்தது. “ஈழம்” என்பது மறைக்கப்பட்டது. இந்தத் தீவுக்குச் சரியான பொருத்தம் உள்ள பெயர் “ஈழம்” என்பதுதான். ஈழம் அல்லாமல் வேறு எந்தப் பெயரும் இல்லை. ஈழம் குறிக்கின்ற பொருள் - “ஏழு கடல் நாடு” என்பதே! (ளுநுஏநுN ளுநுயு டுயுNனு) இலங்கையின் விடுதலைக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி - ஈழத் தமிழ் இனமும் அவர்களுடைய நாடும் புறக்கணிப்புக்கு உள்ளாயின. விடுதலைக்குப் பிறகு, சிங்கள ஆட்சியாளர்களின் இன வேறுபாட்டுக் கொடுமை பயங்கரமான முறையில் தலைதூக்கியது. விழிப்புணர்ச்சி கொண்ட தமிழர்கள் அதற்குத் தங்கள் எதிர்ப்பு முகத்தைக் காட்டினர். அவர்கள் எழுப்பிய அந்த எதிர்ப்பு, வன்செயல் அற்று அமைதி வழிப் போராட்டம், பொதுமக்களிடம் ஆதரவு திரட்டல், அரசினரிடம் பேச்சுவார்த்தை நடத்தல் - இப்படிப்பட்ட வடிவங்களிலேயே இருந்தன. தமிழர்கள் “காந்தியம்” என்னும் வன்செயல் அற்ற அறப்போர்த் தத்துவத்தையே நம்பினர். இந்தியாவின் விடுதலைப் போராட்டத் தலைவர் அண்ணல் காந்தி அடிகளார் வகுத்த அமைதி வழி மறியல் கொள்கையைத் தமிழர்கள் நாடிச் சென்றமைக்குக் காரணம் - தாங்கள் விரும்புகின்ற மனித உரிமைகளையும் சமனிலைச் சமூக நீதியையும் அது பெற்றுத் தரும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆயினும் அவர்களது மந்தமான செயலற்ற போக்கு, சிங்களவர்களுக்கு அனுகூலமாக அமைந்து விட்டது. ஆகவே, தங்களுடைய முன்னோர்களின் பரம்பரைச் சொத்தாக வாய்த்த தமிழர்களுக்குச் சொந்தமான மாகாணங்களில் சிங்கள அரசாங்கம் தங்கள் மக்களின் குடியேற்றங்களை ஏற்படுத்தினர்.

   “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம்” என்னும் சொற்களை நாங்கள் சொல்லும் பொழுது, குடியிருப்பு நிலப்பரப்புகளை மட்டுமே அவை குறிப்பிடவில்லை. வேளாண்மை (விவசாய) நிலங்கள் - அடர்ந்த காடுகள் - வெறுமையாக உள்ள வறண்ட நிலப்பரப்புபள் - கடல்கரைப் பகுதிகள் - தமிழ் மீனவர்களுக்கு வாழ்க்கைத் தேவைகளை வழங்கும் பரந்து விரிந்த வடக்குக் கிழக்கு கடல் பிரதேசங்கள் - முதலானவை அந்த வார்த்தைக்குள் அடக்கிக் காட்டுவன ஆகும்.

   நாடு விடுதலை பெற்ற 1948ஆம் ஆண்டு முதல்கொண்டே, வடக்கு மற்றும் கிழக்குத் தமிழ் மாகாணங்களில் மேற்சொன்ன எல்லாப் பகுதிகளிலுமே தங்களின் இராணுவத்தின் மூலம் சிங்களவர் குடியேற்றங்களை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புச் செயலை சிறிலங்கா அரசு தொடங்கி விட்டது. அதன் விளைவாக, “ஈழம்” என்னும் தங்களுக்கே சொந்தமான தாயக நிலத்திடம் தங்களுக்கு உள்ள பிறப்பு உரிமையையே இழக்கும்படியான கட்டாய நிலைமைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டனர்.

   கி.பி. 2009-ஆம் ஆண்டுவரை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மறைவான இரகசிய முறையில் ஏற்படுத்தப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்கள், இன்றைக்கு வெளிப்படையாகவே எந்த வகைத் தயக்கமும் இல்லாமல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதிலுமே அமைக்கப்பட்டு வருகின்றன. அதற்குக் காரணம், அந்தத் தமிழ்ப் பகுதிகள் அனைத்தும் சிங்களவர்களுக்கு மட்டுமே உரிமை உடையவை என்பதை உறுதிப் படுத்திவிட வேண்டும் என்கிற உள்நோக்கமே ஆகும்.

   தமிழின அழிப்புக்கான சிங்கள அரசின் சதித் திட்டங்கள்

   சிறிலங்கா அரசின் புனர் நிருமாணம் மற்றும் மறு கட்டமைப்பு அமைச்சகம் தரும் புள்ளி விவரங்களின்படி – 1993 மார்ச் மாதத்தில் (19 ஆண்டுகளுக்கு முன்னர்), இராணுவ நடவடிக்கை மூலம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடப்பெயர்ச்சி (வெளியேற்றம்) செய்யப்பட்ட தமிழ் மக்களின் மொத்த எண்ணிக்கை – 5,14,048 ஆகும். இவர்களில் - 1,98,776 பேர் நலவாழ்வு மையங்களில் இருந்தனர். 3,15,272 பேர் குடியிருப்பு இடம் இல்லாதவர்களாகவும், நலவாழ்வு மையங்களுக்கு வெளியேயும் இருந்தனர். மாவட்ட குடியமர்த்தல் நிலப்பங்கீடு திட்டப்படி, மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் எந்தப் பகுதியிலுமே இந்த இடம் பெயர்ந்த மக்களில் எவருக்குமே (சிங்களவர் பகுதிகளில்) குடியமர்த்துவதற்காக எந்த நிலமும் கொடுக்கப்பட வில்லை.

   மேற்கண்டவாறு, இடப்பெயர்ச்சிக்கு உள்ளானவர்களுக்கு மாவட்டங்களில் குடியமர்த்தலுக்கு உரிய நில ஒதுக்கீடு பற்றிய அதிகாரக் கொள்கை இருக்கும் பொழுது – அப்படித் தமிழர்கள் நில ஒதுக்கீடு பெற்றுவிடக் கூடாது என்பதற்கான வஞ்சக வழி முறைகளையும், வெளிப்படையான அச்சுறுத்தல்களையும் படைத்துறையின் உதவியோடு புத்தத் துறவிகள் கட்டவிழ்த்து விட்டனர். அந்த வழிமுறைகளில் அடியில் காணும் நடவடிக்கை வகைகள் அடங்கும்.

   (01) பழைமையான இந்துக் கோவில்கள் அழிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பழைய இந்துக் கோவிலின் சுற்றுப் புறத்திலேயே ஒரு புத்தக் கோவில் நிறுவப்பட்டது.

   (02) தியான மையங்கள் ஏற்படுத்துதல், வழிபாட்டுக் கூடங்களைக் கட்டுதல் உள்ளிட்டவைகளுக்கு நில ஒதுக்கீடு செய்வதற்கு உரிய நிதி உதவிகளுக்காக கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டன. இந்தத் திட்டங்களை நிறைவேற்றும் பொருட்டு அருகில் உள்ள தமிழர்களின் வீடுகள் கையகப்படுத்தப்படுகின்றன. அல்லது அச்சுறுத்தல் மூலம் தமிழர்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர். அதன் மூலம் தமிழரின் அந்த நிலம் புத்த மதத்தின் உரிமைப் பொருள் ஆகிவிடுகிறது.

   (03) தொல்பொருள் ஆராய்ச்சித் துறை தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ப் பகுதிகளில் சில அழிவுச் சின்னங்களைக் கண்டறிந்து, அதை முன்காலத்தில் சோழ மன்னர்களால் அழிக்கப்பட்ட தொன்மையான புத்தமத மிச்ச உடைமைகளே என அறிவிக்கப்படுகின்றது. ஆனால், தமிழரின் நாகரீக வளர்ச்சியின் ஆதாரப் பகுதியே அந்த புத்த மத அழிவுச் சின்னங்கள் என்னும் வரலாற்றுப் பதிவுக்கு இடம் தரக்கூடாது என்பதற்காகவே இப்படிப்பட்ட அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

   (04) ஏறத்தாழ 1979ஆம் ஆண்டு அளவில் அன்றைய சிறிலங்கா குடியரசுத் தலைவர் ஜெயவர்த்தனே, ஒரு முரண்பாடான திட்டத்தைச் செயற்படுத்த முற்பட்டார். நூற்றாண்டுகள் காலமாக வரையறுக்கப்பட்டு இருந்த மாகாண எல்லைகளை மீறிச் சென்று தமிழரின் தேர்தல் தொகுதிகளுக்குள் சிங்களத் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்களை ஊடுருவச் செய்யும் வகையில் - தமிழர் பகுதியான வவுனியா மாவட்டத்திற்குள், மதவாச்சி போன்ற சிங்களத் தேர்தல் தொகுதிக்கு உரிய உதவி அரசாங்க அதிபரின் அதிகார வரம்பை நீட்டிப்பதுதான் அவரது அந்தத் திட்டம். அத்தகைய கூடுதல் தொகுதி இணைப்பின் காரணமாக, ஒரே இரவில் வவுனியாவில் வாழ்ந்த தமிழர்கள் அங்கே சிறுபான்மையினராக ஆகிவிட்டனர். அத்துடன் வவுனியா மாவட்டத்தில் பெரும்பான்மையினராக மாறிவிட்ட சிங்கள மக்களுக்குப் பணியாற்றத் தேவை என்கிற முறையில் ஏராளமான சிங்கள அதிகாரிகள் அந்தத் தமிழர் மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனர். ஜெயவர்த்தனேயின் புதிய திட்டப்படி, பல மாவட்டங்களின் எல்லைகளும் மாற்றி அமைக்கப்பட்டன ஒரு பக்க சார்பான முறையில். அப்படித்தான், அந்தந்த இன மக்களின் சமூக அமைப்பு முறைக்கு மாறுபாடான முறையில், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் எல்லைக் கோடுகள் நியாயமற்ற முறையில் மாற்றி வகுக்கப்பட்டன. இதற்கு இந்தியாவின் நிலையில் ஓர் எடுத்துக்காட்டு மூலம் விளக்கலாம். அதாவது, குஜராத் மாநிலத்துக்கு உள்ளேயே நிலவும் வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருகின்ற குஜராத் மொழி பேசும் மக்கள் வாழும் ஏராளமான கிராமங்களை இராஜஸ்தான் மாநிலத்தோடு இணைத்தால் பிறகு இராஜஸ்தான் மொழி பேசும் அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் அடங்கி நடக்க வேண்டியவர்களாகத்தான் குஜராத்தியர்கள் பின்தள்ளப்படுவார்கள் அதைப் போலத்தான் சிறிலங்காவில், தேர்தல் தொகுதிகளில் தமிழர்களைச் சிறுபான்மையராகவும், சிங்களவர்களைப் பெரும்பான்மையினராகவும் ஆக்குகின்ற போக்கில் தமிழ் மாகாணங்களின் மாவட்ட எல்லைகளை மாற்றியமைக்கும் திட்டத்தை ஜெயவர்த்தனே கொண்டு வந்தார்.

   (05) ஆனால் கடுமையான எதிர்ப்பு எழுந்ததால், அந்த விவாதத்திற்கு உரிய மாவட்ட எல்லை மாற்ற இணைப்புகளுக்குத் தற்காலிகத் தடை விதிப்பதாக சிறிலங்காத் தலைவர் ஜெயவர்த்தனே அறிவித்தார். எனினும் கூட, நடைமுறையில், அரசிதழ் பதிவு அறிவிப்புகள் (கெசட் நோட்டிபிகேஸன்ஸ்) அப்படியே தொடர்ந்தும் இருந்தன. இராணுவத்தின் உதவியோடு, அந்த மாற்றங்களை ஆட்சி நிருவாகம் நிறைவேற்றிக் கொண்டுதான் இருந்தது.

   ஈழத் தமிழரின் ஈடு செய்யமுடியாத துயரங்களும் இழப்புகளும்:

   சொல்லிலே வடிக்க முடியாத துன்பங்களை எல்லாம் ஈழத் தமிழர்கள் ஆகிய நாங்கள் அனுபவித்து வருகின்றோம். எங்கள் விடுதலைப் போராட்டத்தினால் எங்களுக்கு ஏற்பட்டு இருக்கின்ற இழப்புகள் ஈடு செய்யவே முடியாதவை ஆகும். இனப்படுகொலையில் இறந்துவிட்ட எண்ணிக்கையில் அடங்காத இளைஞர்கள் மற்றும் முதியவர்களின் உயிர்களையும் மீட்டெடுக்கவே முடியாது! பிஞ்சுக் குழந்தைகள் உள்ளிட்ட இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இரக்கமே இல்லாமல் படுகொலை செய்யப்பட்டுவிட்டார்கள். அதுவும் “குற்றமே புரியாத அப்பாவிகளும் கொல்லப்பட்டார்கள்” என்பதுதான் மிகவும் பரிதாபத்துக்கு உரிய மனவலியை எவருக்கும் கொடுக்கக்கூடியது ஆகும்.

   ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் வீடுகள் இல்லாதவர்களாக ஆக்கப்பட்டுவிட்டார்கள். கணக்கில் அடங்காத ஏழை நடுத்தர மனிதர்கள் குடியிருப்பு மனைகளையே பறிகொடுத்துவிட்டு ஊரைவிட்டே ஓடும் அவலத்துக்கு ஆளாகிவிட்டார்கள். ஐம்தாயிரத்துக்கும் (50,000) மேற்பட்ட குழந்தைகளும் முதியவர்களும் படுகாயப்பட்டு உடல் உறுப்புகளை இழந்து முடமாகிவிட்டார்கள். எண்ணற்ற குழந்தைகள் தங்களின் மழலைப் பருவத்திலேயே பெற்றோi இழந்து தவிக்கிறார்கள். ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இளம் பெண்கள் தங்களின் கணவரை இழந்து ஆதரவற்ற கைம்பெண்களாகத் (விதவைகளாக) தவிக்கிறார்கள். பதினைந்து இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களின் உறவினர்களையும் நண்பர்களையும் மட்டும் அல்லாமல், தங்களுடைய முன்னோர் வழிவந்த அசையாச் சொத்துக்களையும் பெருத்த செல்வங்களையும் இழந்துவிட்டு நிற்கிறார்கள்.

   இன்னும் கொடிய இரங்கத் தக்க நிலைமை என்னவென்றால் - ஈழ மண்ணிலே மைந்தர்களாகப் பிறந்தவர்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு தாய்நாட்டை விட்டே தப்பி ஓடி, இந்தியாவிலும், மற்ற அயல் நாடுகளிலும் அகதிகளாகத் தஞ்சம் அடைந்தார்கள் என்பதுதான்! ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளின் சாவுக் கொட்டில்களில் அடைக்கப்பட்டு மரண தண்டனையை எதிர் நோக்கியவர்களாக வாழ்கிறார்கள். ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மணிகள் கல்வி என்னும் ஒளி பறிக்கப்பட்டு கண்ணீர் வடிக்கிறார்கள். அவர்களோ, இருள் மூடிய வாழ்க்கைச் சேற்றில் விழுந்து எந்தக் குறிக்கோள்களும் இல்லாதவர்களாக மனம்போன போக்கில் திரிகின்றார்கள்.

   “மறு குடியமர்த்தல்” என்கிற பெயரில் சிறிலங்கா அரசு, இடப்பெயர்ச்சிக்கு இரையாகி மிக முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு தத்தளிக்கும் தமிழர்களை மக்கள் நெரிசல் கொண்ட வெளியூர் இடங்களிலேயே குடியேற்றம் செய்து வருகிறது. அவர்களுடைய சொந்த பகுதிகளில் அவர்கள் மறபடியும் குடியேறி வாழ வழிகோலவில்லை. தமிழர்கள் தங்கள் நிலச் சொத்துக்களையெல்லாம் கொள்ளையர்களிடம் பறிகொடுத்தவர்களாகக் கொடிய துயரில் சிக்கியுள்ளார்கள். அது ஒருபுறம் இருக்க, சிங்களவர்கள், தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை அத்துமீறி ஆக்கிரமிப்புச் செய்து, அங்கெல்லாம் தங்களின் குடியேற்றங்களை ஏற்படுத்துகின்றார்கள். பின் விளைவுகளையே எண்ணிப் பார்க்காமல், அத்தகைய அடாவடித்தனமான கொடுமைகளை இருதயமே இல்லாத சிங்களவர்கள் தயக்கமே இல்லாமல் தமிழர்களுக்கு இழைக்கிறார்கள்.

   எங்கள் இனம் விளக்க முடியாத துன்பங்களுக்கு எல்லாம் பலியாகிவிட்டது. இப்பொழுது, எந்தத் திக்கில் இருந்தும், எந்த ஓர் உதவியும் கிட்டாதவர்களாகவே நாங்கள் தனிமைப்பட்டு நிற்கிறோம்.. “விடுதலைப் புலிகள்” இயக்கம் பற்றிப் பேசுவதால் எங்களுக்கு எத்தகைய ஆதாயங்களும் ஏற்படப் போவது இல்லை.

   இந்திய நா.மன்ற குழுவுக்கு ஈழத் தமிழரின் வேண்டுகோள்!

   1958, 1961,1977,1981 மற்றும் 1983ஆம ஆண்டுகளில் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மிகக் கொடிய தீமைகளை உலகம் முழுவதும் கண்ணாரக் கண்டு உள்ளது. இரத்த தாகம் கொண்ட சிறிலங்கா அரசு, 2009ஆம் ஆண்டில் ஆயுதம் ஏந்தாத தமிழர்களைப் படுகொலைப் புரிவதில் ஆர்வத்துடன் ஈடுபட்டதையும் உலகம் பார்த்துக்கொண்டிருந்தது.

   எங்கள் எதிரிகளுடன் (சிங்கள இனத்தவர்) ஒற்றுமை உறவு கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையை ஈழத் தமிழர்கள் ஆகிய நாங்கள் இழந்து விட்டோ

Untitled Document

No:- 6/7, Poornima Appartment, United India Colony, Second Main Road, Kodambakkam, Chennai - 600 024. T.P.N0 :- 94447 35939, 9841753375 email:- endlfnews@gmail.com

Branch Address: ENDLF, Postfach 641, 3000 Bern 25, Switzerland. Tel: 0041 (0)793 545 637 email: endlfswiss@hotmail.co.uk

ENDLF     ENDLF    ENDLF     ENDLF    ENDLF     ENDLF    ENDLF     ENDLF    ENDLF     ENDLF    ENDLF   ENDLF   ENDLF